கோவை உட்பட 43 இடங்களில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் ரெய்டு..!

கோவை ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் எஸ்.என்.வி கார்டன் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது சோதனை.


கோவை: 

கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை, உட்பட 43 இடங்களில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிகாலையிலிருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை காஞ்சிபுரம் திருச்சி புதுக்கோட்டை சென்னை ஆகிய பகுதிகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.



புதுக்கோட்டை காவல்நிலையத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.27 கோடி சொத்து சேர்த்ததாக, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக, சொத்துக் குவிப்புக்காக வழக்கை சந்திக்கும் 4வது முன்னாள் அமைச்சராகிறார் இவர். 

முன்னதாக, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பாய்ந்தது. தற்போது, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதும் வழக்குப் மற்றும் சோதனை பாய்ந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என மொத்தம் 43 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல, கோவை ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம், எஸ்.என்.வி கார்டன் பகுதியில் உள்ள விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...