கோட்டை பிரிவு அருகே குடிபோதையில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி.!!!

குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் படுத்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் ஏறி இறங்கியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் படுத்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் ஏறி இறங்கியதில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சின்னமத்தம்பாளையம் வினோபாஜி நகரைச் சேர்ந்தவர் அப்புசாமி என்பவரின் மகன் பத்ரசாமி (35). கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று கோட்டை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் சென்று படுத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் அவர் மீது ஏறி இறங்கியதாகத் தெரிகிறது.

இதில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை இறந்த பத்ரிசாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...