உள்ளாட்சித் தேர்தலில் பணம் கொடுத்து ஜனநாயக விரோத வெற்றியை திமுக பெற்றது- பொள்ளாச்சி ஜெயராமன்.!!!

நடந்து முடிந்த 9-மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பணம் கொடுத்து ஜனநாயக விரோத வெற்றியை திமுக பெற்றது என்று திருப்பூர் முன்னாள் துணைச் சபாநாயகர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான பொள்ளாச்சி V.ஜெயராமன் பேட்டியளித்தார்.



திருப்பூர்: நடந்து முடிந்த 9-மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பணம் கொடுத்து ஜனநாயக விரோத வெற்றியை திமுக பெற்றது என்று திருப்பூர் முன்னாள் துணைச் சபாநாயகர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான பொள்ளாச்சி V.ஜெயராமன் பேட்டியளித்தார்.



தமிழகம் முழுவதும் அதிமுகவின் பொன்விழா ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாநகர மாவட்ட அஇஅதிமுக கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறைந்த முதல்வர்கள் புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா ஆகியோர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் திருப்பூர் மாநகரம் முழுவதும் 10-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானத்தைப் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், அதிமுக என்பது வல்லுநர்கள் அறிஞர்களால் உருவாக்கப்படவில்லை பல லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒன்றுகூடி புரட்சித்தலைவரிடம் உருவாக்கச் சொன்ன இயக்கம் தான் அதிமுக, அன்று முதல் இன்று வரை மக்களுக்கான சேவைப் பணியில் அதிமுக ஈடுபட்டுவருகிறது.

புதிதாகத் தோன்றிய பல கட்சிகள் ஓரிரு தோல்விக்குப் பிறகு காணாமல் போய்விடுகிறது, எத்தனை தோல்வி வந்தாலும் இறுதியாக மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றி வாகை சூடும் ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.

வருகின்ற காலங்களில் தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று அனைத்து தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். நடந்து முடிந்த 9-மாவட்ட ஊராட்சி தேர்தல்களில் 2000, 3000 பணம் கொடுத்துக் குறுக்கு வழியில் ஜனநாயக விரோத வெற்றியைப் பெற்றது தான் திமுக, வரப்போகின்ற மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தினால் திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும், கடவுள் சொத்து பாதுகாக்கப்பட்டு அதை மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும் அதுதான் அதிமுகவின் எண்ணம், புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோர் நினைவிடத்திற்குத் தினசரி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்கின்றனர்.

அதுபோல் தான் சசிகலாவும் நேற்று வந்துள்ளார் என்று அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்வில் முன்னாள் துணைச் சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி V.ஜெயராமன் பேட்டி அளித்தார்.

இதையடுத்து கேவிஆர் நகர் நடைபெறும் விசேஷங்கள், சுபகாரியங்கள் மற்றும் ஈமச்சடங்குகள் ஆகியவற்றுக்குப் பொதுமக்கள் பயன் பெறுவதற்காக இலவசமாக 10-டேபிள்கள் 100-ஷேர்களை அப்பகுதி பொதுமக்களிடம் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...