அதிமுகவின் பொன்விழா: வால்பாறை நகரக் கழகத்தின் சார்பில் கொண்டாட்டம்.!!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன் விழா வால்பாறை நகரக் கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.


வால்பாறை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன் விழா வால்பாறை நகரக் கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை. அ.இ.அ.தி.மு.க நகரக் கழகத்தின் சார்பாக வால்பாறை ரொட்டிகடை பகுதியில் அமைந்திருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் வீ.அமீது மாநில தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க கூட்டுக்குழு தலைவர் முன்னிலை வகித்தார். மேலும் விழாவில் நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், வரவேற்பு உரையாற்றினார்.

நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சுடர்பாலு மற்றும் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். நரசப்பன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். வர்த்தக அணி செயலாளர் சண்முகவேலு நன்றியுரை கூறினார்.



இந்நிகழ்வில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மிக்சர்கடை முருகன், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஆர்.ஆர்.சசிக்குமார், அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.கே.எஸ் பாலு, கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், பாபு எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் விமலா நகர இணைச்செயலாளர் ராணி, வீரமணி மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் முருகையா, மணிகண்டன், சுரேஷ்குமார், செந்தூரபாண்டி, முத்துக்குமார், மதியாபரணம், கழக நகர நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து கழக வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்று விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...