டெங்கு : கோவை அரசு மருத்துவமனையில் 2-போ் அனுமதி.!!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இருவருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் டெங்கு பதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் வட கிழக்குப் பருவ மழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது டெங்குகாய்ச்சல் பரவி வருகிறது.

டெங்குகாய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள், சுகாதாரத் துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெங்கு கொசுப்புழுக்களை அழிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும், ஊரகப் பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுவீடாக ஆய்வு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிர்மலா கூறியதாவது:-

இருவருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து டெங்கு சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரையும் மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் மழைக் காலங்களில் டெங்கு பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...