கோவையில் ஆற்றில் அடித்து சென்ற பெண்ணை இரண்டாவது நாளாக தேடும் மீட்பு படையினர்.!!!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்கரை அருகே பள்ளத்தைக் கடக்க முயன்ற பெண் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர் இரண்டாவது நாளாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்கரை அருகே பள்ளத்தைக் கடக்க முயன்ற பெண் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர் இரண்டாவது நாளாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்கரை அருகே பள்ளத்தைக் கடக்க முயன்ற பெண் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை இரண்டாவது நாளாக தேடி வருகின்றனர்.

கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்வதால், சிறு, சிறு ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

அதே போல் பேரூரை அடுத்த தென்கரை கிராமத்தில் உள்ள பள்ளத்திலும் காலையிலிருந்து நீர் ஆர்ப்பரித்துச் செல்வதால், அங்கு பொதுமக்கள் கடக்காமலிருந்து வந்தனர். 



கோவை மாதம்பட்டி அம்பேக்தர் காலனி பகுதியைச் சேர்ந்த மருதன் என்பவரது மனைவி விஜயா (55) என்பவர் வழக்கம் போல் சனிக்கிழமை காலை தோட்ட வேலைக்குச் சென்றார்.

பின் மீண்டும் மாலை சக பெண்களுடன் வீடு திரும்பி உள்ளார். அப்போது தென்கரை கிராமத்திலிருந்த மத்திபாளையம் ஓடையைக் கடக்க முயன்றார். அப்போது மழை நீர் வேகமாக வந்ததில் நிலைதடுமாறி விஜயா ஓடையில் விழுந்துள்ளார்.

இதையடுத்து உடன் சென்ற பெண்கள் உடனடியாக பேரூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விஜயாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் விஜயா உடலை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை மத்தி பாளையம் சென்னனூர் பள்ளத்தில் மீண்டும் தேடுதல் வேட்டையில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்பகுதியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அருகில் உள்ள சென்னனூர் குளத்திற்கு அடித்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் 30-க்கு மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து குளத்துக்குள் இறங்கியும் படகில் சென்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிட்டத்தட்ட பதினைந்து மணி நேரத்துக்கு மேலாகத் தேடுதல் வேட்டையில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...