வெள்ளக்கோவிலில் வெளிமாநில லாட்டரியை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.!!

வெள்ளக்கோவிலில் அரசால் தடைசெய்யப்பட்ட 17-வெளிமாநில அட்ஷயா லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.


திருப்பூர்: வெள்ளக்கோவிலில் அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரியை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உப்பு பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாலா மற்றும் காவல்துறை ரோந்து பணியிலிருந்த போது வேலவன் ஏஜென்சி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு நபர் காவல்துறையினரைப் பார்த்தவுடன் அங்கிருந்து நகர முயன்றார்.

அவரை சந்தேகத்தின் பெயரில் அழைத்து விசாரிக்க அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதை அடுத்து காவல்துறை அவரது சட்டைப் பாக்கெட்டில் சோதனை செய்தபோது கையில் விற்பனைக்காக வைத்திருந்த 17-வெளிமாநில அட்ஷயா லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 600-ஆகியவற்றைக் கைப்பற்றி மேற்படி வெள்ளக்கோவிலில் எல்.கே.சி நகர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் இளங்கோவன் 56-என்பவரைக் கைது செய்து காவல் நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...