கோவையில் சாமி சிலையை குடிபோதையில் சேதப்படுத்திய தொழிலாளி கைது.!!

கோவையில் கோடாலியால் கோவிலில் உள்ள எல்லைச்சாமி சிலையை குடிபோதையில் சேதப்படுத்திய நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையில் சாமி சிலையை குடிபோதையில் சேதப்படுத்திய நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தேவேந்திரன் வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முத்துக்குமார் என்பவர் பூசாரியாக உள்ளார்.

நேற்று இவர் கோவிலிலிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரகுநாதன் வயது 23, என்பவர். கோடாலியால் கோவிலில் உள்ள எல்லைச்சாமி சிலையை உடைத்தார். இதைப் பார்த்த பூசாரி தடுக்க முயன்றார்.

ஆனால் அந்த வாலிபர் பூசாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து பூசாரி சத்தம் போட்டதால் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தது. சிலையை உடைத்துக் கொண்டிருந்த ரங்கநாதனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை சிங்காநல்லூர் காவல்துறை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...