கோவையில் கஞ்சா பதுக்கிய மூன்று பேரிடம் விசாரணை.. 25-கிலோ கஞ்சா பறிமுதல்.!!

கோவையில் கஞ்சா பதுக்கிய மூன்று பேரை போலிசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 25-கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா பதுக்கிய மூன்று பேரை போலிசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 25-கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.

கோவை ஈச்சனாரி அருகில் உள்ள தனியார் கல்லூரி அருகில் உள்ள குடோனில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலிசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, கோவை போத்தனூர் போலிசார் பொறிவைத்துப் பிடித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், கேரளா மாநிலம், எர்ணாகுளம், முளவங்காடு பகுதியை சேர்ந்த அந்தோணி வயது 60, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் வயது-55, மற்றும் மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த மாயன் வயது-55 என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் ஆந்திராவிலிருந்து கடத்திவந்ததாக போலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் மூன்றுபேரிடம் இருந்து 25-கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர் விசாரணைக்கு பிறகு தான் இவர்கள் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தார்கள், இவர்கள் சில்லறை விற்பனையில் ஈடுபடுபவர்களா?, அல்லது ஏஜென்ஸியாக செயல்படுகிறார்களா?, கோவையில் யாருக்கெல்லாம் வினியோகம் செய்துள்ளார்கள் என்பது போலிசாரின் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...