குற்றங்களை தடுக்க புறக்காவல் நிலையம் திறப்பு: மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பங்கேற்பு.!!

கோவையில் குற்றங்களை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையம் இன்று மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் திறந்து வைத்தார். இப்புறக்காவல் கட்டிடம் அமைக்க உதவிய பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை: குற்றங்களை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையம் இன்று மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் திறந்து வைத்தார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் இன்று (16.10.2021) செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் உள்ள மலுமிச்சம்பட்டியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார்.



இப்புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டதன் நோக்கம் பொள்ளாச்சி, செட்டிபாளையம், மதுக்கரை மற்றும் பல்லடம்ரோடு ஆகிய நான்கு சந்திப்புகளில் நடக்கக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை தீர்ப்பதற்காகவும், குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.



பல நவீன வசதிகளை கொண்டு அமைக்கப்பட்ட புறக் காவல் நிலையத்தை துவங்கி வைத்தார். இப்புறக்காவல் நிலைய துவக்க விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கிய ராஜ், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன், செட்டிபாளையம் உதவி ஆய்வாளர் மியாடிட் மனோ, தனிப்பிரிவு காவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இப்புறக்காவல் கட்டிடம் அமைக்க உதவிய பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...