தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்தில் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்து வந்த இரு பெண்கள் கைது

தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்த டிப் டாப் பெண் திருடிகளை மாறுவேட போலீசார் மடக்கி பிடித்தனர்.



கோவை: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்த டிப் டாப் பெண் திருடிகளை மாறுவேட போலீசார் மடக்கி பிடித்தனர்.

தீபாவளி பண்டிகையை அடுத்த மாதம் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் திருடுவதற்காக மதுரை நீலகிரி திண்டுக்கல் உட்பட பல இடங்களிலிருந்து கோவைக்குச் சிலர் வந்துள்ளனர்.

இந்த கும்பலை பிடிக்க கோவை ஆர்.எஸ். புரம் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு உமா, கார்த்திக், பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் மாறுவேடத்தில் டவுன் ஹால் அருகில் உள்ள பிரகாசம் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பஸ்ஸில் இருந்து இறங்கிய பெண்ணின் மீது சந்தேகம் அடைந்து அவரை விசாரிக்க சென்றனர். அவர் போலீசாரை பார்த்ததும் கைப்பையைக் கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். பையை எடுத்து பார்த்தபோது அதில் ரூபாய் 20-ஆயிரம் இருந்தது. விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த பார்வதி 33, என்பதும் தற்போது கோவையில் தங்கி திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.

இவர் வெள்ளலூரில் இருந்து காந்திபுரம் சென்ற பஸ்ஸில் இருந்த பெண்களிடம் பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று தனிப்படை போலீசார் பூ மார்க்கெட்டில் இருந்து காந்தி பார்க் செல்லும் பஸ்ஸில் ஏறி சோதனை மேற்கொண்டனர். பஸ் பூ மார்க்கெட் அருகே சென்றபோது, இளம்பெண் ஒருவர் இருக்கையிலிருந்த ஒரு பெண்ணிடமிருந்து பணப்பையை நைசாக எடுத்தார்.

இதைப் பார்த்த போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் அவர் மதுக்கரை அருகே உள்ள சுந்தரா புரத்தைச் சேர்ந்த முத்தம்மா 24, என்பதும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்ஸில் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அந்த பெண்களிடம் திருடிய பணப்பையில் ரூ. 1000 இருந்தது அந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இதுவரை தீபாவளி வேட்டையில் திருட்டில் ஈடுபட்ட 4 இளம்பெண்கள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...