கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டு புதூரில் அதிக பாரம் ஏற்றி வந்த 2-லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.58 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டு புதூரில் அதிக பாரம் ஏற்றி வந்த 2-லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 58 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் கிணத்துக்கடவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன் உள்ளிட்ட காவலர்கள் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக பாறைகற்கள் மற்றும் சிமெண்ட் கற்கள் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாக அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து பாறைக் கற்களை ஏற்றி வந்த லாரிக்கு 35-ஆயிரம் ரூபாய் அபராதமும், சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த லாரிக்கு 23 ஆயிரம் ரூபாய் என 58-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.