T 23 புலி நலமாக உள்ளது..! மைசூர் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை - வனத்துறை தகவல்.

மைசூர் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் புலியின் உடலில் இருக்கும் 10 க்கும் மேற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியானது நடைபெறவுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் மீட்கப்பட்ட T23 என்ற ஆட்கொல்லி புலிக்கு, மைசூர் வன உயிரின பூங்கா மற்றும் மீட்பு மையத்தில் இன்று முதல் சிகிச்சை அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் பிடிக்கப்பட்ட T23 புலி நேற்றிரவு மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழக மருத்துவ குழுவினர் புலியுடன் சென்று மைசூர் வனத்துறையிடம் அந்த புலியை ஓப்படைத்தனர். மைசூர் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் புலியை ஒப்படைத்த பின், தமிழகவனத்துறை குழுவினர் நீலகிரி திரும்பினர்.

இந்நிலையில், நள்ளிரவில் T23 புலி மயக்கம் தெளிந்து, கூண்டில் இருந்து வெளியே வர முற்பட்டது எனவும் கூண்டில் இருந்து வெளியே வரமுடியாதநிலையில் கூண்டில் புலி ஆவேசத்துடன் உள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது,

T23 புலிக்கு முழு மயக்கம் தெளிந்து, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக, வந்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், புலியின் உடல்களில் இருக்கும் காயங்களுக்கு இன்று முதல் மைசூரில் உள்ள விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

புலியின் உடலில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருக்கும் நிலையில் அதற்கு சிகிச்சை அளிக்கும் பணியானது நடைபெறவுள்ளது எனவும், மைசூர்விலங்குகள் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்குப் பின், T23 புலி ஆரோக்கியமாக உள்ளதாக, வனத்துறை வட்டார தகவல்கள்தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...