திருப்பூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி..!!

கனமழையால் கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அனைப்பாலம் உள்ளிட்ட பகுதிகள் குளம் போல் காட்சியளித்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் வானம் மேக முட்டத்துடன் காணப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மதியம் சுமார் 1 மணி நேரம் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.



திருப்பூர் மாநகர பகுதிகளான அவினாசி சாலை, பல்லடம் சாலை, செவந்தாம் பாளையம், ராக்கியாபாளையம், வெள்ளியங்காடு நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கனமழை காரணமாக கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அனைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...