வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..!

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதியை இன்று கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவ மழை தீவிரமாக உள்ள நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழை பெய்யும். கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னையின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.

இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் மே.மாத்துாரில் 7 செ.மீ., மழை பெய்து உள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதியை இன்று கடக்கும்.

அரபிக் கடலில் மத்திய கிழக்கு, தென் கிழக்கு மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கேரளா- - லட்சத்தீவு கடலோர பகுதியை இன்று கடக்கும். இதனால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...