மைசூரு உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படும் டி - 23 ஆட்கொல்லி புலி..!!

டி23 புலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், 4 கால்நடை மருத்துவர்கள் புலியை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


கோவை: நீலகிரி மாவட்டத்தில் மசனகுடியில் பிடிபட்ட ஆட்கொல்லி புலி மைசூரு உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது அந்தப் புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்று 13 வயதுடையை இந்த டி-23 புலி.

அந்தப் புலி மசினகுடியில் கெளரி என்ற பெண்ணைக் கடந்த ஆண்டு அடித்துக் கொன்றது. பின்னர், அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி, கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்துக் கொன்றது. இதைத் தவிர அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இதற்கிடையில், அப்புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த பசுவன் என்பவரைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றது. இதனால், புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வனத்துறை அதிகாரி தேடுதல் வேட்டையில் உதயன், சீனிவாசன் ஆகிய கும்கி யானைகள், அதவை, ராணா ஆகிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், அந்த புலி வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. புலியை பிடிக்க முயன்றும் முடியாத நிலையில் புலியை வேட்டையாடி பிடிக்க முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவரும், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பும் அவசர வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முடிவில் புலியை சுட்டுக்கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதனையடுத்து, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், அக்டோபர் 14ம் தேதி இரவு புலிக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கிச் சென்றது. இந்நிலையில், மசினகுடி அருகே புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

மசினகுடியில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள புதருக்குள் டி-23 புலி பதுங்கியிருந்தது. மாயார் வனத்தில் கூற்றுப்பாறை பகுதியில் நடமாடிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்று (அக்., 15) மதியம் உயிருடன் பிடித்தனர். 22 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு புலி பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிகிச்சைக்குப் பின் மயக்க ஊசி செலுத்திப் பிடிபட்ட புலி மைசூரு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மைசூரு உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு டி23 புலி கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி23 புலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், 4 கால்நடை மருத்துவர்கள் புலியை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...