ஆண்டிபாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு.!!

ஆண்டிபாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கோவை: ஆண்டிபாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிபாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.



பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



இதேபோல் ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார்.

இதையடுத்து ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையிலும் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார்.



இந்த நிகழ்வுகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பண்ண சாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பாப்பு(எ) திருஞானசம்பந்தம், அக்னிஸ் முகுந்தன், வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...