பழைய வாகனங்களை வாபஸ் பெறும் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம்-சிட்டிசன்ஸ் வாய்ஸ்.!!

15-ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை வாபஸ் பெறும் திட்டத்தை கைவிடக்கோரி சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் நுகர்வோர் அமைப்பு மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளது.



கோவை: 15-ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை வாபஸ் பெறும் திட்டத்தை கைவிடக்கோரி சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் நுகர்வோர் அமைப்பு மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பின் தலைவர் ஜெயராமன் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:







சமீபத்தில்‌ ஊடகம்‌ மற்றும்‌ செய்தித்தாள்‌ வாயிலாக 15 வருடங்களும்‌ அதற்கு மேலும்‌ உபயோகத்தில்‌ உள்ள வாகனங்கள்‌ அனைத்தும்‌ திரும்ப ப்பெற அல்லது சாலையில்‌ பயணிக்க அனுமதியை வாபஸ்‌ பெறும்‌ நடவடிக்கைகள்‌ மத்திய அரசால்‌ கொண்டு வரப்படலாம்‌ என்கிற செய்தி வந்து கொண்டிருக்கிறது.

15 ஆண்டுகளுக்கு மேலும்‌ வாகனங்கள்‌ சாலையில்‌ இயக்கப்படும்‌ என்றால்‌ அப்படிப்பட்ட வாகனங்களுக்கு மறு பதிவு 8 மடங்கு வரை அதிகரிக்கப்பட உள்ளது.

இது வாகனம்‌ பயன்படுத்தும்‌ அனைவருக்கும்‌ மிகுந்த அதிர்ச்சியையும்‌ நம்ப முடியாத மன வேதனையையும்‌ அளிக்கிறது.

இன்று சாமானிய மக்கள்‌ அனேகமாக இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தும்‌ நிலை உள்ளது. அவர்களுக்கு இது மிகப்‌ பெரிய கவலையை/சுமையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா போன்ற வளரும்‌ நாட்டிற்கு இதுபோன்ற சிந்தனையும்‌ நடவடிக்கையும்‌ தற்போதைய கோவிட்‌ 19 கால கட்டத்தில்‌ தேவையும்‌ அவசியமும்‌ இல்லை என்று கருதுகிறோம்‌.

மாறாக இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டால்‌ அது ஏகபோக முதலாளிகளையும்‌, பெரும்‌ வியாபார மையங்களுக்கு மட்டுமே பயன்‌ தரும்‌.

அதே சமயத்தில்‌ சாதாரண ஏழை எளிய மக்கள்‌ ஏற்கனவே கொரோனா போன்ற ஆட்கொல்லி நோயால்‌ பாதிக்கப்பட்டும்‌ பொருளாதார மந்தநிலை காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும்‌ மக்களுக்கு என்ன செய்வது என்று அறியா நிலை உள்ளது.

நம்‌ நாட்டில்‌ தற்போதுள்ள கலாச்சார வழக்கங்கள்‌ அடிப்படையில்‌ ஒருவர்‌ மிதிவண்டியோ அல்லது இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார்‌ வாகனமோ வைத்திருக்கும்‌ பட்சத்தில்‌ 20 அல்லது 30 ஆண்டுகள்‌ வரை கூட நல்ல முறையில்‌ பராமரித்து பயன்படுத்தி வருகின்றனர்‌.

எனவே மக்களின்‌ நலனுக்காக இப்படிப்பட்ட சிந்தனையை மத்திய அரசு தற்போதைக்கு கைவிட வேண்டும்‌.

மத்திய அரசு வாகன உற்பத்தியாளர்களைத் தொடர்பு கொண்டு 15 ஆண்டுகளுக்கும்‌ மேலான வாகனங்களை தொடர்ந்து சாலையில்‌ இயக்க குறைந்த செலவில்‌ சரியான பராமரிப்பு செய்து கொடுப்பது என்பதும்‌ உசிதமாக இருக்கும்‌.

மேற்கண்ட எங்கள்‌ கருத்தை பரிசீலித்து தகுந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும்‌ என நம்புகிறோம்‌.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...