கோவையில் கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற கொடூர மகன்.!!

கோவையில், தந்தையுடன் ஏற்பட்ட தகராற்றில் குடிபோதையிலிருந்த மகன் தந்தை என்றும் பாராமல் அவரை கழுத்தில் மிதித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவையில் தந்தையின் கழுத்தில் காலால் மிதித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு நாராயணசாமி வீதியைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ராஜு என்கிற துரைராஜ் (73). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (63) மற்றும் மகன் ரவிராஜ் ஆகியோருடன் வசித்து வந்தார்.

ராஜேஸ்வரி அதே பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். மகன் ரவிராஜ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ரவி ராஜுக்குக் கடுமையான குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக அவரது குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை ராஜேஸ்வரி வீட்டு வேலைக்காகப் புறப்பட்டுச் சென்று விட்டார். பின்னர் மீண்டும் மதியம் 3-மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே இரும்புக் கட்டிலில் தலையில் ரத்த காயங்களுடன் ராஜு பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் ராஜுவின் தலை மற்றும் மார்பில் காலால் மிதித்த தடயம் இருந்தது. இதையடுத்து ராஜேஸ்வரி அழுதுகொண்டே பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் மகன் ரவிராஜ் வீட்டிற்கு வந்து சென்றதாகக் கூறினர்.

இதை அடுத்து ராஜேஸ்வரி பீளமேடு காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று ராஜுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரி வேலைக்குச் சென்ற பின் ரவிராஜ் வீட்டிற்கு வந்துள்ளதாகத் தெரியவந்தது. மேலும் அப்போது தந்தையுடன் ஏற்பட்ட தகராற்றில் குடிபோதையிலிருந்த ரவிராஜ் தந்தையைக் கீழே பிடித்துத் தள்ளி மார்பில் மிதித்துள்ளார்.

மேலும் தலையைத் தரையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த ரவிராஜை பீளமேடு காவல்துறை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...