தொடர் விடுமுறை காரணமாக வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

வால்பாறை காந்திசிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ஸ்டான் மோர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


கோவை: தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் வால்பாறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்கு கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரானா தொற்று காரணமாக வால்பாறைக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வால்பாறைக்கு வந்துள்ளனர். இவர்கள் ஆறுகளில் குளிப்பதற்காக கூழாங்கல் ஆறு, வெள்ள மலை ஆறு, வெள்ளமலை சுரங்க கால்வாய் ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்கின்றனர்.

மேலும், நல்ல முடி, பூஞ்சோலை, சோலையாறு அணை, டைகர் வாலி ஆகிய காட்சிமுனை பகுதிகளுக்குச் சென்று ரசித்து மகிழ்கின்றனர். மேலும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குடும்பத்துடன் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் நிரம்பி உள்ளன. ரூம்கள் கிடைக்காதவர்கள் வாகனங்களில் குடும்பத்துடன் உறங்கியுள்ளனர். ஹோட்டல்கள் பேக்கரிகளில் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாக வால்பாறை காந்திசிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ஸ்டான் மோர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...