குழந்தைகளுக்கு 20 விநாடிகள் கை கழுவுதல் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், நகம் வளர்த்தல் கூடாது, கை கழுவாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கோவை: கோவை புல்லுக்காடு பகுதியில் உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு கை கழுவுதல் மற்றும் அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
உலக சுகாதரா அமைப்பின் அறிவிப்பின்படி 2008ம் ஆண்டிலிருந்து கை கழுவும் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தற்போது, உலகை அச்சுறுத்திவரும் கொரோனா போன்ற நோய்த் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் கைகளை முறையாக அடிக்கடி கழுவ வேண்டும் என்பதையே முதன்மையாக கூறி வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, இன்று புல்லுக்காடு பகுதியில் பொதுமக்களுக்கு முறையாக ஜெய்கா அமைப்பின் சார்பில் கை கழுவுதல் மற்றும் அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு 20 விநாடிகள் கை கழுவுதல் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், நகம் வளர்த்தல் கூடாது, கை கழுவாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எளிதில் புரியும் வகையில் நாடகங்கள், பாடல்கள் வாயிலாக ஏற்படுத்தினர். அதே போல் நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக நகம் வெட்டிகள் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கிளிசரின் சோப்பு வழங்கி கை கழுவுதலின் சரியான முறை குறித்து எடுத்து கூறினார். கொரோனா போன்ற வைரஸ் கிருமி படிந்துள்ள பொருட்களை தொடும்போது, கைகள் மூலமாகவும் பரவுகின்றன. இதை தவிர்க்க கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் கூறி வருவதாக அவ்வமைப்பை சார்ந்த கல்பனா தெரிவித்தார்.