கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது..!

மேலும், மீட்கப்பட்ட சிறுமி கோவையில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்.


கோவை: கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் தொடர்ந்து போக்சோ வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு மகளிர் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கோவை சுங்கம் பகுதியில் வாசிப்பவர் ஜெயக்குமார், இவருடைய மகன் சதீஷ்குமார் (21), ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் படித்துவிட்டு அந்தப் பகுதியில் பெயிண்டிங் வேலைக்குச் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியுடன் காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 3 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை அழைத்துச் சென்று கோவை பச்சாம்பாளையம் பகுதியில் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் மேற்கு போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அந்தப் பெண்ணை அழைத்து வந்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, மகளிர் காவல் நிலையத்தில் ஆயுத பூஜைக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது அந்தப் பெண் திடீரென மாயமானார்.

மீண்டும் போலீசார் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பிறகு இருவரையும் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையிலான போலீசார் இன்று காலை பிடித்து அந்த வாலிபர் சதீஷ்குமார் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

மேலும் சிறுமி கோவையில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...