கிணத்துக்கடவு அருகே குடிநீர் பைப் போடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்குதல் நடத்திய ஒருவர் கைது - 4 பேர் தலைமறைவு..!!

இதில் காயமடைந்த கந்தசாமி, சிவகாமி, பட்டீஸ்வரன், வெள்ளீஸ்வரி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் குடிநீர் பைப் போடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் மாகாளி அம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் கந்தசாமி, இவரது வீட்டு அருகே அரசம்பாளையம் ஊராட்சி மன்றம் சார்பில் நேற்று முன்தினம் குடிநீர் பைப் போடுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

அப்போது, அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவர் கந்தசாமி மற்றும் அவரது மகன் சிவக்குமார் ஆகியோருடன் குடிநீர் பைப் போடுவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் வடிவேலு உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து கந்தசாமியை தகாத வார்த்தை கூறி தாக்கியுள்ளனர். அப்போது தடுக்கச் சென்றவர்களையும் வடிவேலு உள்ளிட்ட 5 பேர் தாக்கி உள்ளனர்.

இதில் காயமடைந்த கந்தசாமி, சிவகாமி, பட்டீஸ்வரன், வெள்ளீஸ்வரி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காயமடைந்த கந்தசாமியின் மகன் சிவகுமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கந்தசாமி உள்ளிட்ட 4 பேரை தாக்கிய வடிவேல் மற்றும் அவரது மைத்துனர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் வடிவேல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் காவலில் உள்ளார். மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...