T 23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது; புதருக்குள் ஒளிந்துள்ள புலி இன்று பிடிபடும் என்று தகவல்

நேற்று மாலை மசினகுடி அருகே தெப்பகாடு சாலையில் புலி தென்பட்டது. புலி மீது வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தி உள்ளனர். அந்த புலி மயக்க நிலையில் புதருக்குள் ஒளிந்து உள்ளதாக தகவல்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசனகுடி பகுதியில் 4 பேர் மற்றும் கால்நடைகளை தாக்கி அச்சுறுத்தி வந்தT23 புலியை, உயிருடன் பிடிக்ககடந்த 20 நாட்களாக வனத்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று தெப்பக்காடு வனப்பகுதி அருகே வெளிய வந்த புலிக்கு வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

"முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சுற்றி வந்த T- 23 புலிக்கு மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். மயக்க ஊசி செலுத்திய பின்னர் புதருக்குள் மறைந்துள்ள புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் 20 நாட்களாக போக்குக் காட்டி வந்த T - 23 புலி பிடிபடுவது உறுதியாகியுள்ளது", என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது, அந்த புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, முதுமலையில் தேடப்பட்டு வரும் முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்று தான் 13 வயதுடையை இந்த T23 புலி. கடந்த ஆண்டு, மசினக்குடியில் கெளரி என்ற பெண்ணை அந்த புலி அடித்து கொன்றது. பின்னர், அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில், கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்து கொன்றுள்ளது.

இதை தவிர, அப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆட்கொல்லி, T 23 புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்துக் கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்து கொன்றது, அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

ஆட்கொல்லி புலியை, சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடவே, அதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தநிலையில், புலியை சுட்டுக் கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

அதனையடுத்து, அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து 21 நாட்களாக போரடி வருகின்றனர். அதனையடுத்து, அந்தப் புலி வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்தது. மாலை பொழுதுகளில், போதிய வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் வேட்டை தாமதம் அடைந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, புலியின் நடமாட்டம் குறித்து போஸ்பரா, நம்பிகுன்னு, மண்வயல் மற்றும் கார்குடி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்ததில், தற்போது போஸ்பரா வனப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து நம்பிகுன்னு வனப் பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, 21 நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் மசினகுடி அருகே தெப்பகாடு சாலையில் புலி தென்பட்டது. புலி மீது வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசிகளை வெற்றிகரமாக செலுத்தி உள்ளனர் என்றும் அந்த புலி மயக்க நிலையில் புதருக்குள் ஒளிந்து உள்ளது என்றும் இன்று காலைக்குள் புலி பிடிபடும் என்று வனத்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...