போலி செக் மூலம் 34-லட்சம் மோசடி செய்ய முயன்ற 3-பேர் கைது செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் போலி செக் மூலம் 34-லட்சம் மோசடி செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை திருச்சி ரோடு சேரன் பிளாசா வளாகத்தில் ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை இரண்டு பேர் வந்து டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட அஸ்லீப் வெல்லனஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரிலான ஒரு கோடியே 34-லட்சம் ரூபாய்க்கான செக்கை கொடுத்து வங்கியில் செலுத்த முயன்றனர்.
அப்போது, வங்கிக் கிளை மேனேஜர் பிரசாத் ராமகிருஷ்ணனுக்கு செக் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட அப்போது தங்கள் யாருக்கும் அவ்வாறு கொடுக்கவில்லை என்பதை அவர்கள் தெரிவித்தனர்.
இதை அடுத்து, வந்திருந்த நபர்கள் போலியாக செக்கை தயாரித்து வந்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் பிரசாந்த் ராமகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வங்கியில் போலி செக்கை கொடுத்து மாற்ற முயன்றதாக பீளமேடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் செந்தில்குமார் (45) ராமநாதபுரம் காடன் கிரஸ்ட் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் ஸ்ரீ ஹரிஹர குமார் (45), மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சுதீஷ் (27 )ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் ராஜ் என்கிற ராஜ் பரத் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.