திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த புத்தகம் வெளியீடு

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா வருகின்ற டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இதில் நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த 100 புத்தகங்கள் வெளியிட உள்ளது. 

இதுகுறித்து, தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

திராவிட இயகங்களின் முன்னோடி அமைப்பான நீதிகட்சி தனது கொள்கைகளை பிரகடனம் செய்து நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், திராவிட இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெற உள்ளது. 

வருகின்ற 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் நீதிக் கட்சியின் வரலாறு மற்றும் அதன் சாதனைகள் குறித்த தொகுப்புகள் அடங்கிய நூறு புத்தகங்களை வைகோ வெளியிட உள்ளார், அதனை தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் இராசேந்திரன் பெற்றுக்கொள்ள உள்ளார்.

இவ்விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நீதியரசர் அரிபரந்தாமன், திமுக பாராளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், தகலான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்ற உள்ளனர்.

தொடர்ச்சியாக கருத்தரங்கும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தமிழகத்தை தனித்தன்மை கொண்ட மாநிலமாக காரணமான நீதி கட்சியின் கொள்கை பிரகடன நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கருப்புச் சட்டை பேரணியும் நடத்தப்பட உள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்'' என அவர் கூறினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...