தமிழக அரசு உதவினால் 5 மாதங்களில் மரபுசாரா எரிசக்தி பிரிவில் 5 ஆயிரம் மெகாவாட் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்..!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கோவை: தமிழக அரசு உதவினால் 5 மாதங்களில் மரபுசாரா எரிசக்தி பிரிவில் 5 ஆயிரம் மெகாவாட் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தித்துறை வல்லுனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், மரபுசாரா எரிசக்தித்துறையில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழகத்தில், அரசு மின்சாரம் கொள்முதலுக்கான ஒப்பந்தம் (Power Purchase Agreement) புதிதாக அமல்படுத்தினால் உலகளவில் பல முதலீட்டாளர்கள் சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.

மேலும், இதனால் ஐந்து மாதங்களில் 5 ஆயிரம் மெகாவாட் மரபுசாரா எரிசக்தித் துறையில் அதிகரிக்க முடியும் என தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர் சங்கத்தின்(TANSPA) பொருளாளர், சாஸ்தா. எம். ராஜா கூறியதாவது:-



சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட அனைத்து வகையான மரபுசாரா ஆற்றல் உற்பத்தித் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி பிரிவில் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் துறையில் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளன.

ஆனால், 2018க்கு பின் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மின்சாரம் கொள்முதலுக்கான ஒப்பந்தம்(Power Purchase Agreement) புதிதாக அமல்படுத்தவில்லை.

இதனால், கடந்த 2018ல் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தித் துறை கட்டமைப்பு 2,500 மெகாவாட் என இருந்தது. காற்றாலை மின் உற்பத்தி பிரிவில் 8,500 மெகாவாட் கட்டமைப்பு வசதி இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி பிரிவில் 500 மெகாவாட்டும், காற்றாலை மின் உற்பத்தி பிரிவில் 1000 மெகாவாட் மட்டுமே கட்டமைப்பு வசதி அதிகரித்துள்ளது.

ஒருபுறம் தமிழகம் முழுவதும் மின் தேவை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற மரபுசாரா ஆற்றல் உற்பத்தித் துறை வளர்ச்சி பெறாதது மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக உள்ளது.

இன்று நாடு முழுவதும் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மின் பற்றாக்குறை ஏற்படும் என பேசப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் என தொழில்துறையினர் அனைவரும் நம்புகிறோம்.

இன்றைய சூழலில், தமிழக அரசு மரபுசாரா எரிசக்தித் துறை மின்சாரம் கொள்முதலுக்கான ஒப்பந்தம் (Power Purchase Agreement) புதிதாக அறிவிக்க வேண்டும். மேலும் தனியார் பங்களிப்பு(Public Private Partnership) திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இதனால், உலக அளவில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்ய பலர் ஆர்வம் கட்டுவார்கள். இதனால் ஐந்து மாதங்களில் தமிழகத்தில் மரபுசாரா எரிசக்தித்துறை பிரிவின்கீழ் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் செய்வதற்கான புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாதது என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள மரபுசாரா எரிசக்தித் துறை எதிர்கால மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். இதைக் கருத்தில் கொண்டு இத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...