குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான உதகை மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்..!

கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கப்பட்டது.


கோவை: கனமழை காரணமாக கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கப்பட்டது.

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது. மலை முகடுகளிடையே, பல்வேறு குகைகளையும் தாண்டி இயற்கை அழகை ரசித்தபடி இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிறன்று பெய்த கனமழையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயுள்ள மலை ரயில் பாதையில் கல்லாறு - அடர்லி இடையே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்தன.

இதனால், உதகை மலை ரயில் சேவை கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையில் ஏற்பட்ட மண் சரிவினை ரயில்வே ஊழியர்கள் மழையினையும் பொருட்படுத்தாமல் சீர் செய்தனர்.



இதனையடுத்து, மண் சரிவால் கடந்த 4 தினங்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது. வழக்கம் போல், காலை 07.10 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து 180 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச்சென்றது.



சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர். சிலர் ரயில் முன்பு நின்று ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் குதூகலத்துடன் சப்தமிட்டும், ஆரவாரமிட்டும் மகிழ்ந்தனர்.

முன்னதாக, இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களால் மலை ரயில் வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு, வாழை மரங்கள் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் புறப்பட்டுச் சென்றது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...