வெப்ப சலனம் காரணமாக கோவை, நீலகிரி உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்..!

மேலும் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை, நீலகிரி உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, பல மாவட்டங்களில் வரும் 17ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்.

அதேபோல நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் நாளை மறுதினம் மிக கன மழை பெய்யும். கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். வரும் 17ம் தேதி, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

மேலும், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா - ஒடிசா நோக்கிச் செல்லும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...