கோவையில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்களைப் பிடுங்கி, மீண்டும் நட்ட விவசாயி மகிழ்ச்சி.!!

தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்து போவதால் அதைத் தனது மற்றொரு தோட்டத்திற்கு மாற்ற முடிவு செய்த நிலையில், காய்ந்த தென்னை மரங்களைப் பிடுங்கி, மீண்டும் நட்ட விவசாயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்களைப் பிடுங்கி, மீண்டும் நட்ட விவசாயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் ஒணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்து போவதால் அதைத் தனது மற்றொரு தோட்டத்திற்கு மாற்ற முடிவு செய்தார்.

அதன்படி கோவை சுல்தான் பேட்டை சேர்ந்த கனகராஜ் என்பவர் மூலம் அவரது தோட்டத்திலிருந்த 90-தென்னை மரங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியோடு வேரோடு எடுத்து அருகே உள்ள மற்றொரு தோட்டத்திற்கு எடுத்துச் சென்று மறு நடவு செய்தார்.

ஒவ்வொரு தென்னை மரங்களையும் நடவு செய்யும் போது அதனுடன் நவ தானியங்களும் இடப்பட்டு பொதுவாக நீரின்றி தென்னை மரங்கள் வீணாகக் கரி வராமல் இருப்பதைத் தவிர்க்க இம்மாதிரியான வழிமுறைகள் மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இது மாதிரியான வசதிகள் இல்லை, நாங்கள் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் இதேபோல், தென்னை மரங்களை எடுத்து மற்ற தோட்டங்களில் மறு நடவு செய்திருக்கிறோம். இவ்வாறு நடவு செய்யும் போது மரங்கள் மீண்டும் துளிர்க்க 6- மாதம் வரை ஆகும்.

ஆனால், சமீபத்தில் நாங்கள் மரம் நடவு செய்த மரங்கள் வெறும் ஒரே மாதத்தில் பூக்கத் தொடங்கி இருக்கிறது இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...