கோவையில் சாலையில் தவறவிட்ட 50-ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்.!!

கோவையில் சாலையில் தவிர விட்டுச்சென்ற 50-ஆயிரம் பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர் ஆர்.எஸ் புரம் சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அவருக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


கோவை: சாலையில் தவறவிட்ட 50-ஆயிரம் பணத்தைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்.

கோவையில் சாலையில் தவிர விட்டுச்சென்ற 50-ஆயிரம் பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர் ஆர்.எஸ் புரம் சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அவருக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

செவ்வாய் கிழமை காலை 11-மணி அளவில் கோவை ஆர்.எஸ் புரம் அருணாச்சலம் சாலையில் தவறிவிட்ட ரூ.50.000-பணத்தைக் கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் சங்க துணைத் தலைவர் விஜயகுமார் கீழே கிடந்து எடுத்தார்.

இதனையடுத்து எடுத்தவுடனே கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வணங்காமுடியிடம் தகவல் தெரிவித்தார்.

உடனே வணங்காமுடி நிர்வாகிகளிடம் தகவல் கொடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தாமோதரிடம் ஒப்படைக்கச் சென்றனர்.

உடனே அவர் பி.2. ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்குக் கொடுக்கச் சொன்னார். உடனே அங்குச் சென்று உதவி ஆய்வாளர் ஆனந்தஜோதியிடம் ஒப்படைத்தார்.

இதில் கலந்து கொண்டவர்கள் கோவை மாவட்ட திராவிட ஆட்டோ தலைவர் பூபதி, செயலாளர் செல்வம், துணை செயலாளர் ஆட்டோ அருண் மற்றும் எல்பி எஃப் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...