கோவையில் கடந்த 5 மாதங்களில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 16,754 பேர் பயனடைந்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல்

கோவையில் கடந்த 5 மாதங்களில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 16,754 பேர் பயனடைந்துள்ளனர்.


கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவையில் கடந்த 5 மாதங்களில் 16, 754 பேர் பயனடைந்துள்ளனர் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் இன்று வரை இருதய நோய், தோல்நோய், நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், எழும்பியல், குழந்தை மருத்துவம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பு, உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 16 ஆயிரத்து 754 பயனாளிகளுக்கு ரூபாய் 48 .07 கோடி மதிப்பில் மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

பழைய காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள், தங்களது காப்பீடு அட்டை செயல்பாட்டில் உள்ளதா? என இ-சேவை மையம் மூலமாக தெரிந்து கொள்ளலாம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...