கோயில்களை திறக்க வலியுறுத்தி சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!!

கோவை தெற்கு தாலுகா அலுவலக வாசலில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக இந்து கோயில்களைத் திறக்க வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு தாலுகா அலுவலக வாசலில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக இந்து கோயில்களைத் திறக்க வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநில துணைத்தலைவர் புல்லட் ராஜ சேகர் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் ஸ்ரீ அன்புமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் பிரேம் குமார் முன்னிலை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தற்போது தமிழகத்தில் 144-தடை உத்தரவு அமலிலிருந்த போதிலும் விதிவிலக்காக அனைத்து அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு பேருந்துகளும் உணவகங்களும் இயங்கித் தொடங்கிவிட்டன. அத்தியாவசிய மற்ற நிறையக் கடைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் மக்களின் அடிப்படைத் தேவையான ஆன்மீக பூமியான தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தெய்வ சக்தி கொண்ட கோவில்கள் வாரத்தில் முக்கிய நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் திறக்கப்படாமல் உள்ளது.

இது மிகுந்த மன வேதனை அளிக்கும் செயலாக உள்ளன. கொரோவை கட்டுப்படுத்துவதில் தொழில்நுட்பத்தை விடவும் தெய்வ சக்தி மிகவும் முக்கிய பங்காற்றும் என்பதில் அய்யமில்லை.

எனவே விரைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் அனைத்து நாட்களிலும் திறந்து கொரோனா நீங்கச் சிறப்பு வழிபாடு நடத்த அனைத்து கோயில்களையும் திறந்திடத் தமிழக அரசை வலியுறுத்தி சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

எனத் தமிழக அரசுக்கு எதிராகக் கோவிலைத் திறக்க படி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...