கோவை ஆர்.எஸ். புரம் அருகே வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு. திருநங்கை உட்பட 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் செல்போன் மற்றும் ரூ. 1000 பணத்தை பறித்துக் கொண்டு சுல்தான் (29) மற்றும் மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் 28, ஆகியோரை ரேஸ் கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் ஆர்.எஸ். புரம் அருகே உள்ள அன்பகம் வீதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி வயது 29, தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு, இவர் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.

அவருக்கு உதவி செய்ய, விநாயகமூர்த்தி பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது, அந்த வாலிபர் அவரை வ.உ.சி மைதானம் அருகே கொண்டு விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, விநாயகமூர்த்தி அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வ.உ.சி மைதானத்தில் இறக்கிவிட்டு விட்டு, பின்னர் உடல் உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் விநாயகமூர்த்தி மோட்டார் சைக்கிளின் சாவியை பறித்துள்ளார். பின், அவருடன் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில், இருவரும் தப்பிச் சென்றனர்.

இது குறித்து, விநாயகமூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பணம் பறித்த போத்தனூரை சேர்ந்த சுல்தான் என்கிற ஊஜித் அலி (29) மற்றும் அவர் மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் 28, ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...