கோவை நல்லாம்பாளையம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.!!

தசரா விழாவை முன்னிட்டு, கோவையில் காளி, சிவன், பார்வதி, பிரம்மன், உள்ளிட்ட வேடமணிந்து விரதம் துவக்கி கோவையில் தசரா குழுவினரின் திருவிழாவை துவக்கினர்.



கோவை: தசரா விழாவை முன்னிட்டு, கோவையில் காளி, சிவன், பார்வதி, பிரம்மன், உள்ளிட்ட வேடமணிந்து விரதம் துவக்கி கோவையில் தசரா குழுவினரின் திருவிழாவை துவக்கினர்.

திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா கால விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த ஆண்டு தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை நல்லாம்பாளையம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில், அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.



திருவிழாவின் ஒரு பகுதியாக, தொடர்ந்து 22-வது ஆண்டாக, தசரா விழாவை முன்னிட்டு, விரதமிருந்த பக்தர்கள் முத்தாரம்மனுக்கு காணிக்கை செலுத்த காளி, சிவன், பார்வதி, பிரம்மன், விஷ்ணு, நாராயணர், ராமர், லட்சுமணர், அனுமார் உள்ளிட்ட வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்த துவங்கினர்.



இதில், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி அசத்தினர். இதில் நல்லாம்பாளையம் முத்தாரம்மன் கோவில் நிர்வாகிகள் லிங்கதுரை, பால்சாமி, ராஜ்குமார், மணிவண்ணன், சிவசாமி, செல்லப்பா, ஆனந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...