திருப்பூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்..!!

மல்லிகை ஒரு கிலோ 1,100 ரூபாய்க்கும், முல்லை 800 ரூபாய்க்கும், சம்பங்கி 300 ரூபாய்க்கும், ரோஜா பூ மாலை ஒன்று 900 ரூபாய்க்கும் விற்பனையானது.


திருப்பூர்: திருப்பூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து விற்பனையானது.

தொழில் நகரமான திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களும், அதனைச் சார்ந்த உப தொழில் நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர்.

கொரோனா முழு அடைப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தொழில் முடக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் தொழில்துறைகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இதனை அடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஓரளவு நிறுவனங்கள் இயங்கி தொழிலாளர்கள் வேலை பெற்ற நிலையில், நாளை நடைபெற உள்ள ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பின்னலாடை உள்ளிட்ட நிறுவனங்களை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, நாளை பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் திருப்பூர் பூ மார்க்கெட்டில் அதிகளவில் குவிந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

ஆயுத பூஜைக்கு தேவையான பொரி, அவல், கரும்பு, திருஷ்டி பூசணி, பூக்கள் மற்றும் பூஜை பொருட்களை மொத்தமாக வாங்க குவிந்ததால் திருப்பூர் கடைவீதி மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதனிடையே, ஆயுத பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் மல்லிகை ஒரு கிலோ 1,100 ரூபாய்க்கும், முல்லை 800 ரூபாய்க்கும், சம்பங்கி 300 ரூபாய்க்கும், சாமி படங்களுக்கு போடும் மூன்று அடி உயரமுள்ள மாலை ஒன்று 500 ரூபாய்க்கும், ரோஜாப்பூ மாலை ஒன்று 900 ரூபாய்க்கும் விற்பனையானது.

பூக்களின் விலை மிக அதிக அளவில் உயர்ந்து இருந்தாலும், வருடத்தில் ஒரு நாள் கொண்டாடப்படும் ஆயுத பூஜையை முன்னிட்டு நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் தேவையான பூஜை பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...