ICT Academy யின் பெரும் முயற்சியின் கீழ் ஹனி வெல்லின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் படி மகளிர் சுய முன்னேற்றத்திற்காக நேற்று காலை 10 மணிக்கு நிர்மலா மகளிர் கல்லூரியில் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
கோவை: ICT Academy யின் பெரும் முயற்சியின் கீழ் ஹனி வெல்லின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் படி மகளிர் சுய முன்னேற்றத்திற்காக நேற்று காலை 10 மணிக்கு நிர்மலா மகளிர் கல்லூரியில் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
ICT Academy-யின் தலைமை திட்ட செயல் அதிகாரி கே.விஜயன் தொடக்க உரையாற்றி, ICT Academy யின் சேவைகள் குறித்தும், ஆசிரியா் மற்றும் மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்காக ICT Academy எடுக்கும் பல்வேறு முயற்சிகளை விவரித்து மாணவிகளை ஊக்குவித்தார்.
நிர்மலா மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோ.ம.ஹெலன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதோடு, ஐ.சி.டியின் முயற்சிகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஹனி வெல் நிறுவனத்தின் இப்பெரும் செயல்பாடுகள் குறித்து நன்றி தெரிவித்துப் பாராட்டினார்.

இதில் கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில் நுட்ப மாணவிகள் மற்றும் கணிதத்துறை சார்ந்த மாணவிகள் என 110 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக 100 மணி நேர பயற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது. IOT, ROBOTICS, ARTIFICIAL INTELLIGENCE போன்று மேலும் ஐந்து துறைசார் பயிற்சிகள் வழங்குவதோடு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பிற்காக ஹனி வெல் நிறுவனம் நிர்மலா மகளிர் கல்லூரிக்கு அனைத்து உதவிகளும் செய்து வருகின்றனர். இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சான்றிதழ்கள் வழங்கப்பெறுவதோடு வேலைவாய்ப்புக்கும் உதவப்பெறும்.