மேலும், சர்வேத பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு உபகரணங்கள் கண்காட்சியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் அரசின் நிகழ்வுகளை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் புகைப்பட கண்காட்சி அரங்கினை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, இன்று சர்வேத பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தையொட்டி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பேரிடர் மீட்பு உபகரணங்களை பார்வைக்கு கண்காட்சியில் வைத்திருந்தனர். அந்த நிகழ்வினை துவக்கி வைத்து செய்தித் துறை அமைச்சர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்களை பார்வையிட்டார்.
பின்னர் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி. இந்த குறுகிய காலத்தில் கிடைத்த வெற்றி இன்ப அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த வெற்றியானது முழுக்க முழுக்க முதல்வரின் நலத்திட்டங்களுக்கும் அவரின் உதவிகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. நீதிமன்ற உத்தரவின் படி தனிநபர் ஆணையத்தினை அமைத்து, அதன் மூலம் பத்திரிகையாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடக்க வழிவகை செய்துள்ளோம். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து, போலி பத்திரிகையாளர்களை கண்டறிந்து கட்டுப்படுத்தும் குழு அமைக்கப்பட இருக்கின்றது என்றார்.
இதில் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், செய்தித் துறை இயக்குனர் ஜெயசீலன், கோவை மாவட்ட ஆய்வாளர் ராஜகோபால் சுங்கரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்றனர்.