வால்பாறையில் குரங்குடி எஸ்டேட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம்..!!

சட்டம் தெரியாதவர்கள் இருக்கக்கூடாது, சட்டம் ஏழை எளியவர்களையும் சென்றடைய வேண்டும் என்று இந்த முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் குரங்குடி எஸ்டேட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் வழக்கறிஞர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும், வால்பாறை நீதிமன்ற நீதிபதி கவிதா வழிகாட்டுதலின் படியும், வால்பாறை பகுதியில் 45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, குரங்குடி எஸ்டேட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் வழக்கறிஞர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. சட்ட தன்னார்வ பணியாளர் சுரேஸ் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் வழக்கறிஞர் விஸ்வநாதன் பேசுகையில், சட்டம் தெரியாதவர்கள் இருக்கக்கூடாது, சட்டம் ஏழை எளியவர்களையும் சென்றடைய வேண்டும், இளவர் திருமண தடை சட்டம், பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு கருதி தனிமையில் செல்வதை தவிர்க்க வேண்டும், தற்போது வால்பாறை பகுதியில் போக்சோ சட்டத்தில் அதிக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது வருத்தமளிக்கிறது, பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது.

எனவே, பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்ப வேண்டும், தெரியாத ஆண்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...