ஊராட்சி மன்ற தேர்தல்: அதிமுகவினருக்கு சாதகமாக தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவதாக கூறி திமுகவினர் ரகளை.!!

பெள்ளாதி ஊராட்சி மன்ற உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுகவினருக்குச் சாதகமாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவதாக கூறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டு பேரிகார்டுகளை தூக்கி எறிந்து போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.


மேட்டுப்பாளையம்: பெள்ளாதி ஊராட்சி மன்ற உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுகவினருக்குச் சாதகமாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவதாக கூறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டு பேரிகார்டுகளை தூக்கி எறிந்து போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, பெள்ளாதி உள்ளிட்ட 3-ஊராட்சிகளில் கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தேக்கம்பட்டி ஊராட்சியில் 15-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்த முத்துக்குமார் 185-வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதே போல் வெள்ளியங்காடு ஊராட்சியில் 10-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்த முருகம்மாள் என்பவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடைசியாக பெள்ளாதி ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் சுரேஷ் என்பவரும், திமுக சார்பில் அர்ஜூனன் என்பவரும் போட்டியிட்டனர்.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் 6- வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக இருந்தது.இதனால் திமுகவினர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறி ரகளையில் ஈடுபட்டனர்.



அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான சந்திரா முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதிலும் அதிமுகவை சேர்ந்த சுரேஷ் 372-வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அர்ஜூனனை விட 7-வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.



இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான சந்திரா அதிமுகவினருக்குச் சாதகமாக நடந்து கொள்வதாகக் கூறி திமுகவினர் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலக வாயில் கதவை திறக்க முற்பட்டனர்.



இதனால் அங்கு போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், அதனை தொடர்ந்து தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மேலும், திமுகவினரில் சிலர் காவல் துறையினரின் தடுப்புகளைத் தூக்கி சாலையில் எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மேட்டுப்பாளையம் to கோவை சாலையை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தடுத்த காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சற்றுநேரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...