கோவை மாநகராட்சியை கண்டித்து மாநகராட்சி வளாகத்தில் குப்பை கொட்டும் போராட்டம்.!!

கோவை மாநகராட்சி நிர்வாகம் மக்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாததால் மாநகராட்சியைக் கண்டித்து மாநகராட்சி வளாகத்தில் குப்பைகளைக் கொட்டும் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் ஆவேசம்.



கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் மக்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாததால் மாநகராட்சியைக் கண்டித்து மாநகராட்சி வளாகத்தில் குப்பைகளைக் கொட்டும் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் ஆவேசம் அடைந்தனர்.



கோவை உக்கடம் 74-வது வார்டு பகுதியில் குப்பைகள், மற்றும் இறைச்சி கழிவுகளைப் பொதுவெளியில் கொட்டப்பட்டு சுகார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்றுகள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி இல்லத்தரசிகள் கூறும்போது, இந்தப்பகுதியை மாநகராட்சி கண்டுகொள்ளாத பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் குப்பைகளைச் சேகரிக்க மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வருவதில்லை.



மேலும், இந்த பகுதி முழுவதும் சாக்கடை எடுப்பதற்கும் யாரும் வருவதில்லை எனவே இந்த பகுதியைச் சேர்ந்த நாங்களே சாக்கடை எடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.



மேலும், அதேபகுதியைச் சேர்ந்த மெஹாஜுதீன் கூறும்போது, இந்த பகுதியில் 3- ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறோம், இந்த பகுதி மக்களைக் கோவை மாநகராட்சி தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.



தினமும் டன் கணக்கில் இங்குக் குப்பைகள் கொட்டப்படுவதால், சுகாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கோவையில் சாரல் மழை பெய்துவருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதிகளில் தெருவிளக்குகளும் இல்லாததால் இரவு நேரத்தில் இறைச்சி கழிவுகளையும் கொட்டி செல்லும் அவலமும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உடனடியாக கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய சொந்த செலவில் இங்குள்ள குப்பைகளை எடுத்து கோவை மாநகராட்சி வளாகத்தில் கொட்டி, மாநகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடைப்பெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...