கள்ளக்காதலால் ஏற்பட்ட மோதலில் தந்தையையும், மகனையும் துப்பாக்கியால் சுட முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4-பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கள்ளக்காதலால் ஏற்பட்ட மோதலில் தந்தையையும், மகனையும் துப்பாக்கியால் சுட முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4-பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அன்னூரை அடுத்த போகலூரை சேர்ந்தவர் கருப்பசாமி வயது 48, தச்சு தொழிலாளி. இவரது மகன் கார்த்தி 28, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து.
இது தொடர்பாகக் கருப்பசாமி அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கள்ளத்தொடர்பைக் கைவிடக் கோரி கார்த்தியைக் கண்டித்ததால் அவருக்கு இடையே மோதல் போக்கு உருவானது.
இதன் காரணமாக இரண்டு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இதேபோல கடந்த 10 ஆம் தேதி அன்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து கார்த்தி தாக்கினார்.
அதில் அவரது மண்டை உடைந்தது. வெள்ளியங்கிரி ஆதரவாக அவரது மகன் சதீஷ்குமார் அங்கு வந்து தகராற்றில் ஈடுபட்டார். அப்போது கார்த்தி கல்லை எடுத்து சதீஷ்குமாரை தாக்கினார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதில், ஆவேசமடைந்து சதீஷ்குமார் வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து கார்த்திக் மற்றும் கருப்புசாமியைச் சுட்டு விடுவதாக மிரட்டினார். உடனே கருப்பசாமியும் கார்த்தியும் தப்பி ஓடினர். சம்பவம் குறித்து கருப்புசாமி அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார். அதேபோல வெள்ளையகிரியும் போலீசில் புகார் அளித்தார்.
இருதரப்பு புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி அவரது மகன் கார்த்திக், வெள்ளியங்கிரி அவரது மகன் சதீஷ்குமார் ஆகிய 4-பேரையும் போலீசார் கைது செய்தனர்.