சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் 20-வேட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கடையின் ஷட்டரை பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்து கோட்டூர் சமத்தூர் சேர்ந்தவர் பாலமுருகன் வயது 46, இவர் அதே பகுதியில் துணி கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இவர் கடையில் வியாபாரத்தை முடித்து கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல கடையைத் திறப்பதற்கு வந்தார்.
அப்போது கடையின் முன்பக்கம் சட்டர் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியிலிருந்த பணம் ரூபாய் 12-ஆயிரம் மற்றும் 20-வேட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதைக்குறித்து, பாலமுருகன் கோட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.