இன்று மதியம் 1-மணி அளவில் பில்லூர் அணையிலிருந்து 8-ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மேடான பகுதிக்குச் செல்லும் வழி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை: இன்று மதியம் 1-மணி அளவில் பில்லூர் அணையிலிருந்து 8-ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மேடான பகுதிக்குச் செல்லும் வழி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை இந்த அணையானது நீர்பிடிப்பு பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது.
பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100-அடி ஆகும். இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பில்லூர் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அணையின் நீர்மட்ட உயர்வு 83-அடி ஆகவும் கடந்த 9-ஆம் தேதி அணையின் நீர்மட்ட உயரம் 86-அடி ஆகவும் இருந்தது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக படிப்படியாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இன்று அணைக்கு வினாடிக்கு 2-ஆயிரத்து 200-கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையின் நீர்மட்ட உயரம் கிடுகிடுவென உயர்ந்து 97-அடியை எட்டியது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து இன்னும் ஓரிரு நாளில் அணையின் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மதியம் 1 மணி அளவில் அணையிலிருந்து 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மேடான பகுதிக்குச் செல்லும் வழி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.