உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் இதுவரை 10 இடங்களில் திமுக வெற்றி.!!

கோவையில் கடந்த 9-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், இதுவரை 10-இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 9-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், இதுவரை 10-இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கோவையில் கடந்த 9-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 13 -பதவிகளுக்காகத் தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 55,280 பேர் வாக்களித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இதுவரை கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.

அதன்படி, பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென் குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 2312-வாக்குகள் பதிவாகின. இதில் திமுக ஆதரவு வேட்பாளர் நாராயண மூர்த்தி 1451-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக ஆதரவு வேட்பாளர் சரஸ்வதி 834-வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

மேலும், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் திவான்சாபுதூரில் நடைபெற்ற கிராம ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் மொத்தம் 6-ஆயிரத்து 555-வாக்குகள் பதிவாகின. இதில் திமுக ஆதரவு வேட்பாளர் கலைவாணி 4-ஆயிரத்து 372-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மொத்தம் 10 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் தேக்கம்பட்டி 15-வார்டில் 591-வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதர்வு வேட்பாளர் 379- வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வெள்ளியங்காடு 10-வது வார்டில் 411-வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதர்வு வேட்பாளர் முருகம்மாள் 213-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பெள்ளாதி 3-வது வார்டில் 767-வாக்குகள் பதிவாகின, இதில் அதிமுக ஆதர்வு வேட்பாளர் சுரேஷ் 372-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கள்ளிப்பாளையம் 5-வது வார்டில் 272-வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் மனோன்மணி 155-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

போகம்பட்டி 6வது வார்டில் 376-வாக்குகள் பதிவாகின, இதில் அதிமுக ஆதரவு வேட்பாளர் சந்தியா 214-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாதம்பட்டி 3-வது வார்டில் 361-வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் சிவபிரகாஷ் 259-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

குருடம்பாளையம் 9-வது வார்டில் 913-வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் அருள்ராஜ் 387-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிணத்துக்கடவு முத்தூர் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 288-வாக்குகள் பதிவாகின. இதில் திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஜமீன் முத்தூர் 2வது வார்டில் 422 வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் செந்தில்குமார் 289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சீராபாளையம் 4-வது வார்டில் 334-வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 168-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தொடர்ந்து அன்னூரில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்குப் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...