கோவையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆணையாளர்‌ வழங்கினார்‌.!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்கள்‌. இதில், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்கள்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று (12.10.2021) குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ 42வது வார்டுக்குட்பட்ட சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தைத் துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய ஆணையாளர்‌ தெரிவித்ததாவது,

கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்ட முகாமில்‌ 21 ஸ்டால்கள்‌ அமைக்கப்பட்டுள்ளது. இதில்‌ கண்‌, மூக்கு சம்பந்தப்பட்ட பரிசோதனைகள்‌, கோவிட்‌ தடுப்பூசி, கோவிட்‌ பரிசோதனை, பல்வேறு சிகிச்சைகள்‌ மற்றும்‌ மருத்துவ பரிசோதனைகளுக்கான ஸ்டால்கள்‌ அமைக்கப்பட்டுள்ளது.



இத்திட்டத்தின்‌ மூலம்‌ இலவச இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட்‌, இ.சி.ஜி மற்றும்‌ எக்கோ பரிசோதனைகளும்‌ செய்யப்படும்‌. மருத்துவ பரிசோதனைக்குப்‌ பின்னர்‌ முகாமிலேயே முதல்‌ சிகிச்சையும்‌, மருந்துகளும்‌ இலவசமாக வழங்கப்படும்‌.

பொதுமக்கள்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொண்டு ஆரம்ப நிலையிலேயே நோய்க்கான சிகிச்சையும்‌, ஆலோசனையும்‌ பெற்று வருமுன்‌ காப்போம்‌ திட்டத்தின்‌ மூலம்‌ பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்.

இச்சிறப்பு முகாமில்‌ மாவட்ட சுகாதாரப்பணிகள்‌ துணை இயக்குநர்‌ அருணா, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌, உதவி நகாநல அலுவலர்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்‌ பாஸ்கர்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌, மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...