அதிரப்பள்ளி 'புன்னகை மன்னன்' நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகளுக்கு தடை.!!

வால்பாறையிலிருந்து கேரளமாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


வால்பாறை: வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.



இந்நிலையில், வால்பாறையிலிருந்து கேரளமாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிரப்பள்ளி வழியாக வால்பாறை பகுதிக்கு வரும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.



புன்னகை மன்னன் திரைப்படத்தில் வரும் நீர்வீழ்ச்சி இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ஆகும்.

இதில் உலகில் அனைத்து பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து விளையாடி வாழ்ந்து வருகின்றனர்.



இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அதிக வெள்ளப்பெருக்கு காட்டாற்று வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...