கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு..!

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் அதிகாரியின் வசம் கோவை மாவட்ட காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் அவர்கள் சாமியார் தோட்டத்திற்கு விரைந்து சென்று சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார்.

இதேபோன்று கடந்த 07.10.2021-ம் தேதி அதே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் அதிகாரிகளின் வசம் ஒப்படைத்தனர்.

இவ்வழக்கில், தொடர்புடைய இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...