கோவை துடியலூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் திருட்டு..!

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் மற்றும் ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.


கோவை: கோவை துடியலூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பன்னிமடை தீபன் காா்டனில் வசிப்பவா் லதா (55). இவா் கடந்த அக்டோபா் 7ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு தனது மகள் பூா்ணிமாவுடன் சென்னையிலுள்ள தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் கதவு திறக்கப்பட்டுள்ளதாக அருகில் வசிப்பவர்கள் லதாவை தொடா்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வீட்டுக்கு வந்த லதா உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னர், இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில் தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...