கோவையில் மாமியாரின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய மருமகன்.!!!

கோவையில் மாமியார் குளிக்கும்போது படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மராட்டிய மருமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் மாமியார் குளிக்கும்போது படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மராட்டிய மருமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் சுண்டபாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த சின்ன ராம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (56). இவர் பீளமேடு பகுதியில் உள்ள லாரி நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது இளையமகள் ரேவதிக்கும் சென்னையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் மனோஜ் (36) என்பவருக்கும் கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மனோஜ் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

2016-ம் ஆண்டு மனோஜும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இதுகுறித்து ரேவதியின் தந்தை பாலகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ரேவதி கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரசவத்திற்காகக் கோவை அரசு புரம் பகுதியில் உள்ள தந்தை பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் மனோஜ் ஆன்லைன் மூலம் வேலை செய்வதற்காக கோவையிலுள்ள மாமனார் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.

ஏற்கனவே மனோஜும் அவரது மாமனார் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதனால் மனோஜ் மாமனார் குடும்பத்தின் மீது கடும் கோபத்துடன் இருந்து வந்துள்ளார். இதையடுத்து மாமனார் குடும்பத்தைப் பழிவாங்க மனோஜ் திட்டம் தீட்டினார்.

இதற்காக அவரது மாமியார் குளிக்கும் பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி உள்ளார். பின்னர் அவர் குளிக்கும் பொழுது போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர் அந்த போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மாமனார் பாலகிருஷ்ணன் குடும்பத்தை மனோஜ் மிரட்டியுள்ளார்.

இதனால் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பாலகிருஷ்ணன் ஆர்.எஸ். புரம் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மனோஜ் மாமியாரின் ஆபாச படங்களை மொபைல் போனில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாமியாரின் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டிய மனோஜ் (36) மற்றும் போட்டோ எடுத்து மிரட்டுவதற்குத் தூண்டுதலாக இருந்த அவரது தந்தை தர்மராஜ், தாயார் கோமதி, சகோதரி சுகன்யா மற்றும் கார்த்திக் ஆகிய 5-பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...